‘டான்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட் வெளிவந்தது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் துவங்கியது. அதனைத் தொடர்ந்து இறுதிகட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவரும் கல்லூரி மாணவர்களாக நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Advertisement
sivakarthikeyan don movie photos

லைக்கா நிறுவனத்துடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் புரொடேக்சன்ஸ் தயாரித்து வருகிறது. ‘டான்’ படத்தை இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். பிறகு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினமன்று படம் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.