சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

டாக்டர் படத்திற்கு பிறகு சிவகார்த்தியேகன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டான்’. படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி, பாலசரவணன், காளி வெங்கட், ஷிவாங்கி உள்பட பலர் நடித்துள்ளனர். சிபிசக்கரவர்த்தி படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ‘டான்’ வெளியாக வாய்ப்பு உள்ளது.

latest cinema news