100 கோடி வசூலை நெருங்கும் ‘டாக்டர்’ திரைப்படம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘டாக்டர்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படம் வெற்றி நடை போட்டு வருகிறது.

tamil cinema news

பிரியங்கா அருள்மோகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா, அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் வெளியான இரண்டே நாளில் 66 லட்சம் வசூலைக் குவித்துள்ளது.

Advertisement

தற்போதுவரை 96 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டுமே 68 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த நிலையில், ‘டாக்டர்’ உலகம் முழுக்க வசூலில் 100 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்ற தகவல் வந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘டாக்டர்’ படம் வரும் தீபாவளியன்று சன்டிவியில் ஒளிபரப்ப படுகிறது.