டாக்டர் திரை விமர்சனம்

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Doctor movie vimarsanam in tamil

ராணுவத்தில் மருத்துவராக பணிபுரிகிறார் சிவகார்த்திகேயன். இவருடைய காதலி பத்மினியுடன் நடக்க இருந்த நிச்சயதார்த்தம் நின்று போகிறது. இந்நிலையில் பத்மினியின் அண்ணன் மகள் கடத்தப்படுகிறார். இதனை அறிந்த சிவகார்த்திகேயன் கடத்தல் கும்பலை தேடுகிறார். இவருக்கு உதவியாக பத்மினியின் குடும்பம் செயல்படுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் டாக்டர் படத்தின் கதை.

Advertisement

காமெடி ஹீரோவாக தொடங்கி ஆக்சன் ஹீரோவாக தன்னை மாற்றி கொண்டு வரும் சிவகார்த்திகேயனை வேறு ஒரு கோணத்தில் காட்டக் கூடிய படமாக இந்த படம் அமைந்துள்ளது. அருண் அலெக்சாண்டர், தீபா, இளவரசு போன்றோர் காமெடியில் அசத்தி உள்ளனர்.

மெட்ரோ பைட் சீன் மற்றும் இடைவேளைக்கு முன்பு வரும் காட்சிகள் பிரமாதம். நெல்சன் தனது முந்தைய படத்தை போலவே காமெடி காட்சியில் கலக்கி இருக்கிறார். சீரியசான காட்சிகளை கூட காமெடியாக மாற்றி சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

படத்தில் முதல் அரைமணி நேரம் மெதுவாக நகர்கிறது. அதன்பின் டாப் கியரில் செல்கிறது. இரண்டாம் பாதியில் வரும் வில்லன் வினய் அதிரடி வில்லனாக இல்லாமல் அமைதியான வில்லனாக காணப்படுகிறார்.

அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம் சேர்க்கிறது. குறிப்பாக செல்லம்மா பாடல் ரசிக்க முடிகிறது. ஆனால் இந்த பாடல் படம் முடிந்த பிறகு வருகிறது. கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார்.