சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் செம்ம குஷியாகியுள்ளனர்.

cinema news in tamil

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். மார்ச் மாதம் வெளியாகவேண்டிய இப்படம் தேர்தல், கொரோனா இரண்டாம் அலை, ஊரடங்கு போன்ற காரணங்களால் தள்ளிப்போனது.

Advertisement

படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடப் படக்குழு முடிவெடுத்தது. அதிலும் இழுபறி நீடித்து வந்தது. தற்போது தமிழ்நாட்டில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் படத்தை நேரடியாக திரையரங்கிலேயே வெளியிடலாம் என முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில் அக்டோபர் 9 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.