பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல பிரச்சனைகளுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

tamil cinema news

பிரியங்கா மோகன், யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். 3 வாரமாக படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 90 கோடிகளை வசூலித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

Advertisement

இந்நிலையில் டாக்டர் படம் குறித்த செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் 4ம் தேதி மாலை 6.30 மணிக்கு டாக்டர் திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.