என்னை ‘தல’ என்று அழைக்காதீர்கள். அஜித்குமார் திடீர் அறிவிப்பு

என்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித்குமாரின் செயலாளர் சுரேஷ் சந்திரா டுவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெரும் மரியாதைக்குரிய ஊடக பொதுஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு இனிவரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போது என்னைப்பற்றி குறிப்பிட்டுப் பேசும் போது என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏகே என்று குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையயோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.

Advertisement

உங்கள் அனைவரின் ஆரோக்கியம் உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மனநிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன். அன்புடன் அஜித் குமார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.