டோலிவுட் பக்கம் செல்லும் அஜித் பட இயக்குனர்

இயக்குனர் ஷங்கர், லிங்குசாமி மற்றும் மோகன்ராஜா ஆகியோர் தெலுங்கு படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களாக வலம் வருகின்றனர்.

இவர்களை தொடர்ந்து இயக்குனர் விஷ்ணுவர்தன் தற்போது டோலிவுட் பக்கம் செல்கிறார். அறிந்தும் அறியாமலும்',பட்டியல்’, சர்வம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் அஜித்தின்பில்லா’, `ஆரம்பம்’ படங்களை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

Advertisement

பாலிவுட்டில் இவருடைய இடத்தில் வெளியான ‘ஷேர்ஷா’ என்கிற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கு படங்களை இயக்கி வரும் ஷங்கர், லிங்குசாமி, மோகன்ராஜா பட்டியலில் விஷ்ணுவர்தனும் இணைந்துள்ளார்.