ஜெய் பீம் பட கதாநாயகியை பாராட்டிய இயக்குனர் சுசீந்திரன்..!

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இயக்குனர் சுசீந்திரன் ஜெய் பீம் படத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ் அவரை பாராட்டியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது : “இந்த இத்திரைப்படத்தில் கதையின் நாயகி செங்கேணி – லிஜோமோல் ஜோஸ் பேசிய வசனங்களை விட பேசாத முகபாவனைகள் அற்புதம். நிறைய விருதுகள் இந்த திரைப்படத்திற்காக உங்களுக்கு கிடைக்கும். வாழ்த்துக்கள்” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement
Image