ஜெய் பீம் படத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் இயக்குனர் கவுதமன்..!

சூர்யா நடித்து ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படம் சமீபத்தில் ஆன்லைனில் வெளியானது. இப்படத்தில் வேண்டுமேன்ற சில இனத்தினர் மீது வன்மம் புகுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

latest tamil cinema news

இதுகுறித்து இயக்குனரும், நடிகருமான வ.கவுதமன் அறிக்கை: உண்மை சம்பவத்தை எடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகவும் தமிழ் சமூகத்தின் ஒரு குடியின் அடையாளமான அக்னி குண்டத்தை திட்டமிட்டு நேர்மையற்ற ஒரு கொடூரனின் வீட்டு அடையாளமாக காட்சிப்படுத்தியதிற்காக படத்தின் தயாரிப்பாளர், நடிகர் சூர்யாவுக்கும் இயக்குனர் ஞானவேலுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

அந்தோணிசாமி என்கிற பெயருக்கு பதிலாக குருமூர்த்தி என பெயரிட்டு குருவையும், அக்னிகுண்டத்தையும் திட்டமிட்டு அவமானப்படுத்தியுள்ளார்கள்.

ஒரு படைப்பு என்பது எப்போதும் தன் சமூகத்தை பண்படுத்த வேண்டுமே தவிர, ஒருபோதும் புண்படுத்தி விடக்கூடாது. ஒரு கலவரத்தை படைப்பாக்கலாம். ஆனால் ஒரு படைப்பு ஒருபோதும் கலவரத்தை உருவாக்கி விடக்கூடாது.

சில நுாற்றாண்டுகளாகவே இந்த மண்ணிற்கு சம்பந்தமில்லாத ஒரு கூட்டம் தங்களின் அரசியலுக்காகவும், ஆட்சி அதிகாரத்திற்காகவும் வடக்கே வன்னியர்கள், பட்டியல் சமூகத்தினரை அடித்துக் கொல்ல வைத்ததோடு மட்டுமல்லாமல் தெற்கே தேவர்கள், தேவேந்திர குல வேளாளர்கள் இடையிலேயும் கலவரத்தை உருவாக்கி தமிழர் குடிகளுக்குள் நிரந்தர பகையினை உருவாக்கி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நேர்மையற்ற காட்சியினை நீக்குவதோடு, தங்களையும் சரி செய்து கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.