சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ படத்தின் விமர்சனம்.

சந்தானம் மூன்று வேடங்களில் நடித்த டிக்கிலோனா படம் OTT தலத்தில் வெளியாகி உள்ளது. இப்படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனகா மற்றும் ஷிரின் நடித்துள்ளனர். மேலும், யோகி பாபு, ஹர்பஜன் சிங், மொட்டை ராஜேந்திரன், ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

cinema review in tamil

2015 ம் ஆண்டு ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் நடிப்பில் வெளிவந்த “இன்று நேற்று நாளை” பட கான்செப்டில் வெளியான காமெடி படம் தான் இந்த டிக்கிலோனா.

Advertisement

EB மணியாக வரும் சந்தானத்திற்கு 2027 ஆம் ஆண்டில் தான் காதலித்த பெண்ணுடன் நடந்த திருமணம் கசப்பில் போய் முடிகிறது. பிறகு மின்சார பிரச்சனை சரி செய்ய சென்ற இடத்தில் டயம் மெஷின் ஒன்று அவருக்கு கிடைக்கிறது. அந்த இயந்திரத்தை பயன்படுத்தி 2020 க்குப் பயணிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

சந்தானம் தனது காமெடி கூட்டாளிகளுடன் சேர்ந்து வழக்கம்போல காமெடி செய்கிறார். சில இடங்களில் திரைக்கதையில் சொதப்பல்கள் உள்ளன. படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். “ஓ மை கடவுளே” படத்தின் சாயல் பல இடங்களில் வந்து செல்கிறது.

முனிஷ்காந்த், யோகி பாபு மற்றும் அருண் அலெக்சாண்டர் சிறப்பாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பிளஸ். அர்வியின் ஒளிப்பதிவும், ஜோமின் எடிட்டிங்கும் சிறப்பாக உள்ளது.

படத்தில் பெரிதாக சொல்வதற்கு கருத்து எதுவும் இல்லை. ஒரு முறை பார்க்கலாம். சிரிக்கலாம். அவ்ளோதான்.

டிவிட்டரில் @cinema_tamilxp என்ற பக்கத்தை Follow செய்யவும்.