மாநாடு படத்திற்கு தனுஷ் ரசிகர்கள் எதிர்ப்பு – விளக்கம் சொன்ன வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘மாநாடு’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு தனுஷ்கோடி என பெயர் வைத்துள்ளார் வெங்கட்பிரபு. இதற்கு தனுஷ் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சிம்புவை ஹீரோவாகவும் தனுஷை வில்லனாகவும் சித்தரிக்க வேண்டும் என்பதற்காக வில்லனுக்கு தனுஷ்கோடி என பெயர் வைத்திருப்பதாக தனுஷ் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சிம்பு நடிப்பில் ஏற்கெனவே வெளிவந்த ஈஸ்வரன் படத்தில் நீ அழிக்கிறதுல்ல அசுரண்ணா நான் காக்கிறதுல்ல ஈஸ்வரன் என்ற வசனம் பேசி இருந்தார். அதனால் இந்த படத்திலும் திட்டமிட்டே வைத்திருப்பதாக தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி வருகின்றனர்.

Advertisement
latest tamil cinema news

இது தொடர்பாக மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அளித்த பேட்டி ஒன்றில் அதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் ‘மாநாடு’ படத்தின் வில்லன் பெயர் வலிமையானதாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி வைத்தோம்.

ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் சிம்பு, தனுஷ் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அந்தப் பெயரே வைத்தால் இயல்பாகவே வில்லனுக்கு ஒரு பவர் வந்து விடும் என்பதற்காக அப்படி வைத்தோம். தனுஷ்கோடி என்ற பெயரைக் கேட்டதும் கண்டிப்பாக தனுஷ் சந்தோஷப்பட்டு இருப்பார் என தெரிவித்துள்ளார்.