பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்

பிரபல நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் காலமானார். அவருக்கு வயது 72.

திருடா திருடி’, ‘மகதீரா’, ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘தில்லுக்கு துட்டு’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ அரண்மனை, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிவசங்கர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
tamil cinema news

இந்நிலையில் நேற்று (நவ.28) சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.