“மாஸ்டர்” மற்றும் “வலிமை” படத்தில் உள்ள ஒரு ஒற்றுமை, திட்டமிடப்பட்டதா?

அஜித் மற்றும் இயக்குனர் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள வலிமை படம், இரண்டு வருடத்திற்கு மேலாக படப்பிடிப்பு நடைபெற்று, தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக தமிழகத்தில் ஓமிக்ரோன் வைரஸ் பரவல் காரணமாக வலிமை படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வலிமை திரைப்படம் சமீபத்தில்தான் யு எ என்ற தணிக்கை சான்றிதழ் பெற்றது. மேலும் இப்படத்தில் சில சர்ச்சையான காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதால் 15 இடங்களில் காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன.

இதனால் வலிமை திரைப்படம் மூன்று மணி நேரம் 10 நிமிடங்களில் இருந்து, இரண்டு மணி நேரம் 58 நிமிடங்கள் 35 நொடிகள் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதே போன்றதொரு நிகழ்வு நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலும் நடந்துள்ளது.

Advertisement

அதாவது மாஸ்டர் திரைப்படத்தின் நீளமும் இரண்டு மணி நேரம் 58 நிமிடங்கள் முப்பத்தி ஐந்து நொடிகள்தான். இந்த இரண்டு படங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை பற்றி தற்போது அவரது ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

இது தற்செயலாக நடந்த ஒரு செயலா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.