என்னது தீபாவளி அன்னைக்கு தியேட்டரை மூட போறீங்களா…அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளும் (நவம்பர் 3), தீபாவளி தினத்தன்றும் (நவம்பர் 4) தமிழகம் முழுவதும் தியேட்டர்களை மூட உத்தரவிட வேண்டும் என தூத்துக்குடியைச் சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

cinema news in tamil

திரையரங்குகள் 100 % இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் அந்த மனுவில் ” தமிழகம் இன்னும் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபடவில்லை. இந்நிலையில் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே சினிமா திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்தும், நவம்பர் 3, 4 தேதிகளில் திரையரங்குகளை மூடவும் உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அண்ணாத்த, எனிமி, வா டீல் உள்ளிட்ட படங்கள் தீபாவளியன்று திரைக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.