சமந்தா முதல் இமான் வரை : 2021ல் விவாகரத்து செய்த சினிமா பிரபலங்கள்

2021ம் ஆண்டு இன்றுடன் முடிவடைகிறது. இந்த ஆண்டில் கொரோனா தொற்று, கனமழை என பல பிரச்சனைகளை கடந்து வந்துள்ளோம். விவேக், புனித் ராஜ்குமாரின் மறைவு சினிமா துறையில் அதிர்ச்சியை தந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க இன்னொருபுறம் சினிமா பிரபலங்களின் விவாகரத்து எண்ணிக்கையும் இந்தாண்டு அதிகரித்துள்ளது.

அமீர் கான் – கிரண் தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் அமீர்கான் – கிரண் ராவ் இருவரும் தங்களது 15 வருட திருமண பந்தத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தனர்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த 2017ம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் அக்டோபர் 2 ஆம் தேதி பிரிந்து செல்வதாக அறிவித்தனர்.

Advertisement

ஒரு சமூக ஊடக அறிக்கையில் கீர்த்தி குல்ஹாரி தனது கணவர் சாஹில் சேகலிடமிருந்து அதிகாரப்பூர்வமாக பிரிந்ததாக அறிவித்தார்.

சுஷ்மிதா சென்னுக்கு 45 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். பிறகு ரோஹ்மன் சால் என்ற விளம்பர பட நடிகரை 3 வருடமாக சுஷ்மிதா காதலித்து வந்தார். இந்த நிலையில் காதல் முறிந்து விட்டதாக சுஷ்மிதா சென் அறிவித்தார்.

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் டி.இமான் 2008ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு டி இமான் – மோனிகா ரிச்சர்ட் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

latest tamil cinema news