இயக்குநர் பா.ரஞ்சித் மீதான வழக்கு ரத்து!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசியதாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அவரை கைது செய்ய வேண்டும் என சிலர் போராட்டம் நடத்தினர்.

latest tamil cinema news

வரலாற்றுப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன். ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைத்தளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. எனவே என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என பா.ரஞ்சித் கூறினார்.

Advertisement

பா.ரஞ்சித் மீதான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.