ரஜினிக்கு அறுவை சிகிச்சை – மருத்துவமனை வெளியிட்ட தகவல் இதோ..!

நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது மனைவி தெரிவித்தார்.

Advertisement

இந்நிலையில் ரஜினியின் உடல் நலம் குறித்து மருத்துவமனை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் `நடிகர் ரஜினிகாந்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பு தற்போது செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்குப் பின் ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வருகிறார். சிகிச்சை முடிந்து இன்னும் சில நாள்களில் வீடு திரும்புவார்.’ என மருத்துவமனை நிர்வாகம் செய்திக் குறிப்பு வெளியிட்டிருக்கிறது.