பிரபல பிரேசில் பாடகி விமான விபத்தில் உயிரிழந்தார்..!

பிரேசிலின் மிகவும் பிரபலமான பாடகிகளில் ஒருவரான மரிலியா மென்டோன்கா விமான விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 26.

Marilia Mendonca: Popular Brazil singer dies in plane crash at 26

தென்கிழக்கு மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.

Advertisement

பாடகி மென்டோன்கா 2019 இல் லத்தீன் கிராமி விருது வென்றுள்ளார். தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு முதல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். பிறகு ஆன்லைன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அவற்றில் ஒன்று, YouTube இல் 3.3 மில்லியன் உச்ச பார்வையாளர்களுடன், உலகில் அதிகம் பார்க்கப்பட்ட நேரலை ஸ்ட்ரீம் என்ற சாதனையை படைத்தது.