நடிகர் விஜய் வீட்டிற்கு வெடுகுண்டு மிரட்டல் : போலீஸ் விசாரணை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவருடைய படங்கள் வெளிவரும் போதெல்லாம் அவரை சுற்றி சர்ச்சைகளும் உருவாகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வெற்றியை பெற்றனர்.

Advertisement

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது. தகவல் அறிந்த சென்னை வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனைக்கு பிறகு அது புரளி என்று தெரியவந்தது. மிரட்டல் அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரித்ததில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரன் என்பது தெரியவந்தது.

புவனேஸ்வரன் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.