Blood Money திரை விமர்சனம்

கே.எம்.சர்ஜுன் இயக்கிய படம் தான் பிளட் மணி (BLOOD MONEY). இதில் ப்ரியா பவானி சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், மேலும் மெட்ரோ ஷிரிஷ், கிஷோர், சுப்பு பஞ்சு மற்றும் பலர் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் Zee 5 OTT இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

கிஷோரும் அவருடைய சகோதரரும் குவைத் நாட்டில் சிறையில் இருக்கின்றனர். செய்யாத தவறுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் அவர்களுக்கு தூக்கு தணடனை வழங்க முடிவு செய்யப்படுகிறது.

தனது மகன்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என தாயும், சிறுவயதில் இருந்தே தனது தந்தையின் முகத்தை பார்க்காத கிஷோரின் 8 வயது மகளும் போராடுகிறார்கள். இவர்களை காப்பற்றுவதற்க்காக ஒரு செய்தி சேனலில் துணை ஆசிரியராக பணிபுரியும் ப்ரியா பவானி சங்கர் முயற்சிகளை எடுத்து வருகிறார்.

Advertisement

இறுதியில் இவரின் முயற்சி வெற்றிபெற்றதா? அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை என்ன ஆனது? அவர்கள் செய்த தவறு என்ன என்பதை படத்தின் மீதிக்கதை.

செய்தி சேனலில் பணிபுரியும் ப்ரியா பவானி சங்கர் சிறப்பாக நடித்துள்ளார். மெட்ரோ ஷிரிஷ்க்கு காட்சிகள் குறைவுதான். சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கிஷோர் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக தனது அம்மாவிடமும் மகளிடமும் கதறி அழும் காட்சி கண்கலங்க வைக்கிறது. மற்ற நடிகர்களும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

கிஷோரின் மகளாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பு பாராட்டத்தக்கது. படத்தில் தேவையில்லாத பாடல்களோ, சண்டை காட்சிகளோ இல்லை. படம் முழுவதும் விறுவிறுப்பாக செல்கிறது. கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டதால் படம் ஒன்றரை மணி நேரத்தில் முடிந்துவிடுகிறது.

சதீஷ் ரகுநாதனின் இசை கதையை நன்றாக நிறைவு செய்கிறது. படத்தின் கேமராவொர்க் திருப்தி அளிக்கிறது.

மொத்தத்தில் மொத்தத்தில் Blood Money அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான பாச போராட்டம்.

டெலிகிராமில் எங்களுடன் இணைந்திருங்கள்

‘பிளான் பண்ணி பண்ணனும்’ திரை விமர்சனம்