‘பீஸ்ட்’ படம் இப்படித்தான் இருக்கும்..அப்டேட் கொடுத்த நெல்சன்..!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் பீஸ்ட் எப்படிப்பட்ட படம் என்று படத்தின் இயக்குனர் நெல்சன் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது: விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படம் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டரில் இருந்து இது வேறுபட்டிருக்கும் என்றார்.

Advertisement

படப்பிடிப்பு இந்த மாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ சூப்பர் ஹிட்டானது. இதனால் பீஸ்ட் படமும் சூப்பர் ஹிட் ஆகும் என விஜய் ரசிகர்கள் நம்பிக்கையோடு இருந்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை அன்று டாக்டர் படம் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. டிவியில் ஒளிபரப்பான சில மணிநேரத்தில் நெட்ஃப்ளிக்ஸிலும் வரவிருக்கிறது.