பீஸ்ட் படத்தின் நூறாவது நாள் சூட்டிங் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. வசூலையும் வாரி குவித்தது. இதனை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். அந்தப் படமும் வெற்றி பெற்றது. இதனால் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் நூறாவது நாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை நெல்சன் திலீப்குமார் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது.

Advertisement

அந்த புகைப்படத்தில் இருக்கும் அபர்ணா அவர்கள் விஜய்க்கு தங்கையாக நடிக்கிறார். இவர் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.