விஜய் சேதுபதியை எட்டி உதைத்த மர்மநபர் – வைரலாகும் வீடியோ

பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை நபர் ஒருவர் பாய்ந்து வந்து தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எதற்காக அவர் தாக்கினார், என்ன பிரச்சினை, என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து விஜய் சேதுபதி தரப்பில் விசாரித்தபோது, “இது தொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை” என்று கூறினார்கள். விஜய் சேதுபதியைத் தாக்கிய நபரை விமான நிலையத் பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருவதால், விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தற்போது விஜய் சேதுபதி இந்தியில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துவரும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.