ஒரே நாளில் ரிலீசாகும் ஆர்யாவின் 2 படங்கள்

நடிகர் ஆர்யா நடித்து வெளிவந்த ‘சார்பட்டா பரம்பரை’ படம் ஓடிடி-யில் வெளிவந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் அடுத்ததாக நடித்துள்ள 2 படங்களும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்கும் படம் ‘எனிமி’. அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்கி வருகிறார்.

Advertisement
cinema news in tamil

ஆயுத பூஜை பண்டிகையையொட்டி வருகிற அக்டோபர் மாதம் 14-ந் தேதி ‘எனிமி’ படம் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டது.

இதே போல ஆர்யா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ படமும் அதே நாளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் பல படங்கள் ஓடிடி-யில் வெளிவந்தது. தற்போது ஆர்யா நடிக்கும் 2 படங்களும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.