நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் என்ன செய்கின்றன? பேராசிரியர் அருணன் கேள்வி

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் பாமகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி நடிகர் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் தருவதாக அறிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement

இந்நிலையில் பேராசிரியர் அருணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது : “நடிகரும் தயாரிப்பாளருமான சூரியாவை அடித்தால் ரூ ஒருலட்சம் என்று ஒரு காேஷ்டி அறிவிக்கிறது, ஓடிய அவரது படத்தை தடுத்துநிறுத்துகிறது. நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் என்ன செய்கின்றன? சூப்பர் ஸ்டார்கள் உலகநாயகன்கள் தலைகள் தளபதிகள் எங்கே? இன்று சூரியாவுக்கு நாளை இவர்களுக்கு!” என அவர் தெரிவித்துள்ளார்.

latest tamil cinema news