ரசிகர்களுடன் சேர்ந்து ரத்ததானம் செய்த அருண் விஜய்..!

நடிகர் அருண் விஜய் தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்களுடன் சேர்ந்து ரத்த தானம் செய்துள்ளார்.

அருண் விஜய் நடிப்பில் உருவான யானை, பார்டர் உள்ளிட்ட படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

Advertisement

இதனையடுத்து அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடத்தினார்கள். இந்த ரத்ததான முகாமில் 40க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். இதை கேள்விப்பட்ட அருண் விஜய் தனது ரசிகர்களுடன் சேர்ந்து ரத்ததானம் செய்தார்.

cinema news in tamil

அவசரத் தேவையாக எப்போது ரத்தம் தேவைப்பட்டாலும் ரசிகர் மன்றம் மூலம் ரத்த தானம் அளிக்க முடிவு செய்துள்ளனர். ரசிகர்களின் இந்த செயலுக்கு நடிகர் அருண்விஜய் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.