விஜய் சேதுபதி ஜோடியாகும் மாடல் அழகி – அதிகாரபூர்வ அறிவிப்பு

பொன்ராம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி ஜோடியாக நடிகை அனுகீர்த்தி வாஸ் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

அனுகீர்த்தி வாஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர். இப்படம் மூலம் அவர் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

விஜய்சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார், லாபம், அனபெல் சேதுபதி படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. மேலும் இவர் வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்திலும் நடித்து வருகிறார்.

விஜய்சேதுபதி இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் படத்தில் தோன்றுவார் என இயக்குனர் பொன்ராம் தெரிவித்திருந்தார். பொன்ராம் இயக்கிய ‘எம்ஜிஆர் மகன்’ தயாராகி வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கிறது.