‘ஆன்டி இண்டியன்’ திரை விமர்சனம்

மாறன், ஆடுகளம் நரேன், ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். YouTube தளத்தில் தமிழ் சினிமாவை விமர்சனம் செய்து பிரபலமானவர் தான் ப்ளூ சட்டை மாறன். இவருக்கு எதிர்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

anti indian movie vimarsanam in tamil

இவர் முதல் முறையாக இயக்கியுள்ள படம்தான் ‘ஆன்டி இண்டியன்’. எல்லா படத்தையும் விமர்சனம் செய்யும் மாறன் அவர் இயக்கிய படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

சுவர் விளம்பர கலைஞரான பாட்ஷாவை சிலர் கொலை செய்கின்றனர். பாட்சாவின் தந்தை இஸ்லாமியர். அவளுடைய தாய் இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்துக்கு மாறியவர். இதனால் பாட்சாவின் உடலை அடக்கம் செய்வதில் பிரச்சினை ஏற்படுகிறது.

Advertisement

இந்நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது. இதனால் அரசியல்வாதிகள் இந்த பிரச்சனையை வைத்து அரசியல் செய்கிறார்கள். இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.

பாட்ஷா என்ற பாத்திரம் இறந்து சடலமாகக் கிடப்பதிலிருந்து துவங்குகிறது படம். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாம் பாதி சற்று பொறுமையை சோதித்தாலும் மீண்டும் விறுவிறுப்பாக செல்கிறது.

மதவாத அரசியலையும் மதத்தை வைத்து மோசமான காரியங்களை செய்யும் அரசியல்வாதிகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். படத்தில் வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் ரசிக்க வைக்கின்றன.

மதவாத சக்திகள், காவல்துறை, அரசியல்வாதிகள், ஊடகம் என பல்வேறு தரப்பினரின் தவறுகளை சரியாகவே சுட்டிக்காட்டுகிறார். சமூகத்தில் பேசப்பட வேண்டிய சிக்கலான விஷயத்தை தைரியமாக கையில் எடுத்து பேசியதற்காகவே மாறன் பாராட்டப்பட வேண்டியவர்.

அரசாங்கமும், அதிகாரமும் மத மோதல்களை எப்படி தங்களின் சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறது என்ற விஷயங்களை பட்டியலிட்டு காட்டியிருக்கிறது இந்த ‘ஆன்டி இண்டியன்’.

மொத்தத்தில் ஆன்டி இண்டியன், நிச்சயமாக கண்டு களிக்க வேண்டிய திரைப்படம்.