ஆன்டி இந்தியன் படத்திற்கு மீண்டும் தடை

ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆன்டி இந்தியன் திரைப்படம் சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ளது. ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இந்தியன் திரைப்படம் டிசம்பர் 10ஆம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு படத்தை தடை செய்வதாக அறிவித்தது. அதன் பிறகு பல போராட்டங்களுக்கு பிறகு இன்று இந்த படம் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 228 தியேட்டர்களிலும் கர்நாடகாவில் 20 தியேட்டர்களிலும் படம் வெளியாக உள்ளதாக ப்ளூ சட்டை மாறன் அறிவித்தார்.

Advertisement

இந்த படத்தை அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். அமெரிக்காவில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் சிங்கப்பூரில் ரிலீசாகவில்லை. மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதால் சிங்கப்பூரில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் அந்த படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க வில்லை.

இந்நிலையில் ஆன்டி இந்தியன் படக்குழு அங்கேயும் வருகைக்காக மேல்முறையீடு செய்துள்ளனர். நாளை அல்லது நாளை மறுநாள் சிங்கப்பூரில் படம் வெளியாகும் என ப்ளூ சட்டை மாறன் உறுதியளித்துள்ளார்.