இன்று முதல் ஓடிடியில் ‘அண்ணாத்த’ படம்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ படம் தீபாவளியன்று வெளியானது. ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூலை குவித்த ‘அண்ணாத்த’ படம் இன்று முதல் ஓடிடியில் ரிலீசாகி உள்ளது.

அண்ணாத்த படம் மிகப்பெரிய வசூலைக் குவித்தாலும் அதற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. மேலும் தொடர் கனமழை காரணமாக வசூல் குறைந்தது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் இன்று வெளியாகியுள்ளதால் அண்ணாத்த படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Advertisement

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் இன்று முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும், நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியிடப்பட்டுள்ளது.