அனபெல் சேதுபதி படத்தின் விமர்சனம்

விஜய் சேதுபதி, டாப்ஸி, ஜெகபதி பாபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தீபக் சுந்தர்ராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். கிருஷ்ண கிஷோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தியா சுதந்திரமடைவதற்கு முன் கட்டப்பட்ட அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் இருக்கின்றன. அந்த அரண்மனையில் பௌர்ணமி தினத்தன்று யார் வந்து தங்கினாலும் அவர்கள் இறந்து ஆவியாகிவிடுகிறார்கள். அதே அரண்மனையில் டாப்சி தனது குடும்பத்தினருடன் வந்து தங்குகிறார்.

Advertisement

பிறகு பௌர்ணமி தினம் வருகிறது. அதில் டாப்சி என்ன ஆனார்? அரண்மனையின் பின்னால் உள்ள மர்மம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதிக்கு காட்சிகள் குறைவுதான். ஆனால் நடிப்பிற்காக எந்த முயற்சியும் அவர் எடுக்கவில்லை. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு இப்போது என்ன ஆனது என்று தெரியவில்லை.

annabelle sethupathi review

படத்தின் முழுக் கதையுமே டாப்சியை சுற்றியே நகர்கிறது. ஆனால் அவருக்கும் காட்சிகள் இல்லாதது வருத்தம். அனுபவம் உள்ள நடிகர்கள், நடிகைகள் பலர் இருந்தாலும் யாருடைய நடிப்பும் மனதில் பதியவில்லை. யோகி பாபுவின் காமெடி ஆங்காங்கே கைக்கொடுத்து இருக்கிறது.

சுவாரஸ்யமாக ஆரம்பிக்கும் திரைக்கதை, போக போக அந்த சுவாரஸ்யம் இல்லாமல் போகிறது. கிருஷ்ண கிஷோர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அதுவும் சுமார்தான்.

ஜார்ஜ் கௌதம் ஒளிப்பதிவில் அரண்மனை ஜொலிக்கிறது. இதை காமெடி பேய்ப் படம் என்று படக்குழு தொடர்ந்து விளம்பரப் படுத்தி வந்தது. படத்தில் திகிலும் இல்லை காமெடியும் இல்லை.