இயக்குனராக களமிறங்கும் நடன இயக்குனர் பாபி ஆண்டனி

கலகலப்பு, சகுனி, பர்மா, பட்டய கிளப்பணும் பாண்டியா போன்ற படங்களில் பணியாற்றிய நடன இயக்குனர் பாபி ஆண்டனி தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். இதில் ஆண்ட்ரியா ஜெர்மியா நடிக்கிறார்.

cinema news in tamil

இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கவுள்ளார். பாபநாசம் புகழ் ஆஷா சரத் இந்த படத்தில் உதவி கமிஷனராக நடிக்கிறார். மேலும் சந்தோஷ் பிரதாப் மற்றும் பால சரவணன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

Advertisement

காளி வெங்கட் சப்-இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். “ராட்சசனில் அவர் நடித்ததைப் போலவே அவரது பாத்திரமும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என பாபி ஆண்டனி தெரிவித்துள்ளார்.

அகில் ஜார்ஜ் இப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார். ரான் ஈதன் யோஹன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.