ஆனந்தம் விளையாடும் வீடு திரை விமர்சனம்

நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக், சேரன், ஷிவாத்மிகா ராஜசேகர் என பலர் நடித்துள்ளனர். சித்துகுமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

திண்டுக்கல் அருகே வசிக்கும் ஜோ மல்லூரிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு சரவணன், விக்னேஷ், சினேகன், என நான்கு மகன்கள். சரவணனுக்கு கவுதம் கார்த்திக், வெண்பா என இரண்டு பிள்ளைகள். இரண்டாவது மனைவிக்கு சேரன், செல்லா, சவுந்தரராஜா ஆகியோர் மகன்கள்.

கூட்டு குடும்பமாக இணைந்து வாழும் இவர்கள் சொந்தமாக ஒரு பெரிய வீட்டைக் கட்ட முடிவு செய்கின்றனர். இவர்களுக்கு பகையாளியாக வில்லன் டேனியல் பாலாஜி இவர்களைப் பிரிக்க நினைக்கிறார். இந்த வீட்டை கட்டுவதற்கு குடும்பத்திற்குள் பல பிரச்சனைகள் வருகிறது. இறுதியில் அண்ணன் தம்பிகள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்தார்களா? வீட்டை கட்டினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

Advertisement

அண்ணன், தம்பி பாசத்தை மையமாக வைத்து குடும்பத்தின் பாசப் போராட்டத்தை உணர்வுபூர்வமாக எடுத்துள்ளார் இயக்குனர் நந்தா பெரியசாமி. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருப்பதால் படம் சீரியல் போல் செல்கிறது.

கவுதம் கார்த்திக், சேரன், சரவணன் ஆகிய மூன்று பேரும் படத்தின் முழு கதையும் தாங்கி சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். சேரன் எமோஷனலான கதாபாத்திரம். மிக அழகான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

வில்லனாக வரும் டேனியல் பாலாஜி வழக்கமான தன்னுடைய ஸ்டைலில் வில்லத்தனம் செய்திருக்கிறார். சித்துகுமார் இசை மற்றும் பாலபரணியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.