தனது உருவ படத்தை ஓவியமாக வரைந்த மாற்றுத்திறனாளியை பாராட்டிய அமிதாப் பச்சன்.

அமிதாப் பச்சனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது, அமிதாப் பச்சன் தற்போது 13 வது சீசன் கவுன் பனேகா கோரோபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் அவருடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவருடைய ரசிகர் ஆயுஷ் என்பவர் அமிதாப் பச்சனின் உருவ படத்தை ஓவியமாக வரைந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மாற்றுத்திறனாளியான ஆயுஷ் தனது கால்களின் உதவியுடன் ஓவியம் வரைந்துள்ளதை அவர் பாராட்டியுள்ளார்.

Advertisement