RRR படத்தில் வெறும் 20 நிமிடம் மட்டுமே நடித்தவருக்கு இத்தனை கோடி சம்பளமா..!

நான் ஈ, பாகுபலி என வெற்றிப்படங்களை இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண், பாலிவுட் நடிகர்களான ஆலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர்களை வைத்து ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.

கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியாகவேண்டிய இப்படம் கொரோனா மற்றும் 50 சதவீதம் மட்டுமே திரையரங்குகளில் அனுமதி என்ற காரணத்தால் படம் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த பட ரிலீஸிற்காக படக்குழு பெரிய அளவில் புரொமோஷன் செய்து வந்தார்கள்.

tamil cinema news

இந்த படத்தில் நடிகை ஆலியா பட் காட்சி வெறும் 20 நிமிடம் மட்டுமே வருகிறார் என்று கூறப்படுகிறது. அதற்காக அவருக்கு ரூ. 9 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் நடித்துள்ள அஜய்தேவ்கனுக்கு ரூ. 35 கோடி சம்பளம் என கூறப்படுகிறது.

Advertisement