தலைவி படத்தில் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தலைவி படம் நேற்று முன்தினம் வெளிவந்தது. இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கினார்.

இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் அரவிந்த் சாமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Advertisement

இந்நிலையில் ‘தலைவி’ படத்தை பார்த்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் படம் குறித்து விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அவர் கூறியதாவது “ஒரு பெண் எப்படி வாழ்க்கையில் துணிவுடன் சாதித்துக் காட்டுகிறார் என்பதை தலைவி படம் காட்டுகிறது. அது பாராட்டுக்குரியது. எம்.ஜி.ஆர் பதவிக்கு ஆசைப்பட்டது போல காட்சி வருகிறது. அந்த காட்சி உண்மையல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் ஜெயலலிதா எம்.ஜி.ஆரை அவமதிப்பது போலவும் காட்சிகள் உள்ளது. தி.மு.க எங்களுக்கும் எங்கள் தலைவிக்கும் கொடுத்த தொல்லைகளை படத்தில் சொல்லவில்லை. என அவர் கூறியுள்ளார்.