விஷால் படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்..!

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது விஷாலை வைத்து படம் எடுக்க போவதாக தகவல் வந்துள்ளன.

cinema news in tamil

விஷால் நடிப்பில் உருவான எனிமி படம் தீபாவளியன்று வெளியாகிறது. விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஆக்ஷன் படமான ‘சக்ரா’ படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கயிருப்பதாக விஷால் கூறியுள்ளார்.

Advertisement

ஆதிக் ரவிச்சந்திரன் பிரபுதேவாவை வைத்து பகீரா என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார்.

தற்போது விஷால் வீரமே வாகை சூடும், லத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் வீரமே வாகை சூடும் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது.

மிஷ்கின் தொடங்கி வைத்த துப்பறிவாளன் 2 படம் வரும் ஜனவரியில் தொடங்க விஷால் திட்டமிட்டுள்ளார்.