மதுபானத்தை விளம்பரம் செய்யும் நடிகைகள் – வலுக்கும் கண்டனம்.

தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகைகள் தரமற்ற பொருட்களை விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளம்பரப்படுத்திய தமன்னா சர்ச்சையில் சிக்கினார்.

tamil cinema news

தற்போது முன்னணி நடிகைகளாக இருக்கும் ஹன்சிகா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட சில நடிகைகள் வெளிநாட்டு மதுபானங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

புகை பிடிப்பது மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கானது என திரைப்படங்களில் விளம்பரம் செய்துவிட்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது போன்ற செயல்கள் இளைஞர்களை குடிக்க தூண்டுவதாக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement