திடீரென்று திருமணம் செய்து கொண்ட காமெடி நடிகை

கடந்த 2012ம் ஆண்டு ஜீவா – சமந்தா நடிப்பில் வெளியான ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வித்யுலேகா ராமன். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு தீயா வேலை செய்யனும் குமாரு, மாலினி 22 பாளையங்கோட்டை, வீரம், ஜில்லா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

Advertisement

கடந்த ஆண்டு லாக்டவுன் காலத்தில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் உடன் வித்யுலேகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து வாழ்த்துக்களை பெற்றார்.

இந்நிலையில், திடீரென்று வித்யுலேகாவும் சஞ்சய்யும் திருமணம் செய்துகொண்டனர். ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.