பண மோசடி செய்ததாக நடிகை சினேகா போலீசில் புகார்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சினேகா. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் பண மோசடி செய்ததாக நடிகை சினேகா தனியார் ஏற்றுமதி நிறுவனம் மீது சென்னை கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

cinema news in tamil

கவுரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது மாதந்தோறும் ரூ. 25 லட்சம் முதலீடு செய்தால் மாதம்தோறும் ரூ 1.80 லட்சம் கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இதை நம்பிய நடிகை சினேகா பணத்தை முதலீடு செய்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தப்படி மாதம்தோறும் பணத்தை அந்த நிறுவனம் தரவில்லை. இதனால் அந்த நிறுவனம் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி நடிகை சினேகா கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.