என்ன ஆச்சு ஹன்சிகா மோத்வானிக்கு? – அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகை ஹன்சிகா தனது பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், அவரது கொழு கொழு அழகை ரசித்த ரசிகர்களுக்கு ஒல்லியான அழகை பார்த்தவுடன் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர், எலும்பும் தோலுமாக அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா மோத்வானி, தன்னுடைய கொழு கொழு அழகால் ரசிகர்களை முதல் படத்திலேயே கவர்த்திழுத்தவர்.

Advertisement

பாலிவுட்டில் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் ஜோடியாக “தேசமுருடு” என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர், தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சிங்கம் ‘2, ‘மான் கராத்தே’, ‘பிரியாணி’ உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.

ஹன்சிகாவின் கொழு, கொழு அழகு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பலரும் இவரை குட்டி குஷ்பூ செல்லமாக அழைத்த காலங்களும் உண்டு .

ஆனால் தன்னுடைய உடல் எடையால்தான் பட வாய்ப்புகள் குறைவதாக எண்ணி, எடையை குறைக்க துவங்கினார். ஆனால் தற்போது மிக அதிகமாக எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார்.

எலும்பும் தோலுமாக மாறியுள்ள ஹன்சிகா… சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர் ரசித்து வந்தாலும், சிலர் என்ன ஆனது இப்படி ஆகிடீங்க என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ…

Hansika Motwani Stills
Hansika Motwani Stills
Hansika Motwani Stills
Hansika Motwani Stills
Hansika Motwani Stills
Hansika Motwani Stills