கொரோனாவால் பிரபல பாலிவுட் நடிகர் மரணம் – மீண்டும் சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த பாலிவுட்டின் மூத்த நடிகரான யூசுப் உசைன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு வயது 73.

இந்தி திரையுலகில் தூம் 2, ராயீஸ், ரோட் டூ சங்கம், தபாங் 3, ஓ மை காட், ஐ எம் சிங் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் யூசுப் உசைன்.

Advertisement
tamil cinema news

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

யூசுப் உசைன் உயிரிழந்ததை அவரது மருமகனும், இயக்குனருமான ஹன்சல் மேதா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவரது மறைவிற்கு பாலிவுட் நடிகர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

நேற்று கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உயிரிழந்த நிலையில் தற்போது யூசுப் உசைனின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.