திடீர் எச்சரிக்கை விடுத்துள்ள நடிகர் விஜய் – ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

tamil cinema news latest

மறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என அவருடைய ரசிகர்கள் போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.

Advertisement

இது குறித்து அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இயக்கத்தை சேர்ந்தவர்கள் சிலர் ஆர்வக்கோளாறால் விஜய்யை பிற தலைவர்களோடு இணைத்து தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது.

இச்செயல்களை விஜய் அனுமதியோடு கண்டித்துள்ளேன். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளேன். இதுபோன்ற செயல்களை விஜய் என்றும் விரும்புவதில்லை. இது போன்ற செயல்கள் நீடித்தால் இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.