சந்திரமுகி 2 படத்தில் வைகை புயல் வடிவேலு

கடந்த 2005ம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக வடிவேலுவின் காமெடி சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார் பி. வாசு. இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என செய்திகள் வந்துள்ளன.

Advertisement
cinema news in tamil

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முதல் பாகத்தை போல இரண்டாவது பாகத்திலும் வடிவேலு காமெடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடிவேலுவுக்கான காமெடி காட்சிகளை உருவாக்கும் பணியில் பி.வாசு ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால் சினிமாவிலிருந்து விலகி இருந்த வடிவேலு ரெட் கார்டு நீக்கப்பட்ட நிலையில் வடிவேலுக்கு சந்திரமுகி 2 பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தற்போது வடிவேலு சுராஜ் இயக்கதில் உருவாகும் ‘நாய் சேகர்’ படத்தில் நடிப்பதற்காக தயாராகி வருகிறார்.