துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நடிகர் சூர்யா..!

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இன்னொருபுறம் சூர்யாவுக்கு மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது.

கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் சூர்யா மீது தனிப்பட்ட விமர்சனங்களும் தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சூரியாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement

உளவுத்துறை தகவலின்படி நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு 5 ஆயுதம் ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சூர்யாவுக்கு என்று தனியாக இரண்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சூர்யா செல்லும் இடங்களுக்கெல்லாம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

tamil cinema news

ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறி வன்னியர் சங்கம் சார்பில் குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.