திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா.

சூர்யா நடித்த ஜெய் பீம் படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவு அளித்து வந்தார். நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் “ஜெய்பீம் திரைப்படம்:
‘கலைநாயகன்’ சூர்யா’ அவர்களின் சமூகப் பொறுப்புணர்வுடன்கூடிய தொண்டுள்ளத்தை – தொழிலறத்தை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளமாரப் பாராட்டுகிறோம்! ” என கூறியிருந்தார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “மதிப்புக்குரிய திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம்.

Advertisement

தங்கள் வாழ்த்தும் பாராட்டும் மன நிறைவை அளித்தன.

மக்கள்தொகையில் மிகச் சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும் தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

தங்கள் குறிப்பிட்டதைப் போல, மாண்புமிகு தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மிகுந்த மனநிறைவை தந்துள்ளது.

பாதிக்கப்படும் மக்களின் பிரச்சனைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய் பீம் திரைப்படத்தின் நோக்கம். கவன படுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும்.

ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
சூர்யா ,”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.