‘மாநாடு’ படத்தை பாராட்டிய நடிகர் கார்த்தி

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த படம் வசூலை வாரி குவித்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் கார்த்தி மாநாடு படம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் டைம் லூப் படத்திற்கு வெங்கட் பிரபு முத்திரையை பதித்துள்ளார். இந்த சிக்கலான படத்தை பொழுதுபோக்காக வைத்து எடுத்த படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்தி தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் ‘கைதி 2’ படத்திலும் நடித்து வருகிறார்.

Advertisement