தனுஷ் பட நடிகரின் காரை அடித்து நொறுக்கிய காங்கிரஸ் கட்சியினர்..!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ’ஜகமே தந்திரம்’ படத்தில் சிவதாஸ் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடித்து இருந்தார். இவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

cinema news in tamil

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது அங்கு சென்ற இவரது கார் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. தான் அவசரமாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. மேலும் போராட்டத்தை கைவிடுங்கள் என்றும் கூறியிருக்கிறார்.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் அவருடைய காரை அடித்து நொறுக்கி உள்ளனர். இந்த சம்பவம் தொடங்க காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.