தீபாவளி கொண்டாட்டம் ரசிகர்களை கவர்ந்த 5 நடிகைகள்.. அதிலும் அமலாபால்..?

தீபாவளி என்றால் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என பண்டிகை களைகட்டும். இதில் திரைப்பிரபலங்கள் தீபாவளிக் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார்கள். இந்த தீபாவளிக்கு மங்களகரமான மஞ்சள் நிறமுடைய உடைகளை பெரும்பாலான நடிகைகள் அணிந்திருந்தார்கள்.

சினேகா: புன்னகை இளவரசி என்று அழைக்கப்படும் சினேகா, அவரது கணவர் பிரசன்னா மற்றும் இவர்களது குழந்தைகள் என சினேகாவின் மொத்த குடும்பமும் மஞ்சள் நிற ஆடையில் ஜொலித்தார்கள். இந்த தீபாவளி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அனைவருக்கும் ஹாப்பி தீபாவளி என போஸ்ட் செய்திருந்தார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

Advertisement

மீனா: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மீனா நடித்திருந்தார். இந்த தீபாவளி அன்று வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் மீனாவின் என்ட்ரியில் அவரது ரசிகர்கள் விசிலடித்து மகிழ்ந்தார்கள். தீபாவளி அன்று மஞ்சள் நிற புடவை அணிந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அத்துடன் எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்றும் அண்ணாத்த தீபாவளி கொண்டாட ரெடியா என பதிவிட்டிருந்தார்.

அமலா பால்: மஞ்சள் நிற உடையில் கொஞ்சம் கவர்ச்சியாக உடை அணிந்திருந்தார் அமலா பால். ஆடை திரைப்படத்தில் பிறகு தமிழில் எந்த திரைப்படத்திலும் இதுவரை நடிக்கவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அமலாபால் அவரது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவரது தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அமலாபாலின் முன்னாள் கணவர் ஏ எல் விஜய் அவர்களின் குழந்தை பிறந்ததற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

சாய் பல்லவி: விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். ஆனால், மலையாள படமான பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த தீபாவளியை அம்மா, அப்பா, தங்கை என குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார் சாய் பல்லவி. அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

ரகுல் பிரீத் சிங்: கன்னட திரைப்படமான கில்லி (2009) படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகத்தில் தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு பிறகு இந்தி, கன்னடம், தமிழ் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இவரும் தீபாவளியன்று மஞ்சள் நிற சுடிதாருடன் தனது தோழிகளுடன் கொண்டாடினார். தீபாவளி கொண்டாட்டத்தின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.